×
Saravana Stores

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மீனவர் கல்வி வளர்ச்சி இயக்கம் வலியுறுத்தல்

குளச்சல், செப். 5: மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி இயக்க (பெடா) செயற்குழு கூட்டம் ஆலஞ்சியில் இயக்கதலைவர் பிரிட்டோ ஆன்றனி தலமையில் நடந்தது. குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ் முன்னிலை வகித்தார். ஆல்பர்ட் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தாரகை கத்பர்ட் எம்எல்ஏ கலந்து கொண்டார். தாரகை கத்பர்ட்டிற்கு வாணியக்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த், சைமன்காலனி பங்குத்தந்தை ஜிம், குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன், மிடாலம் பங்குத்தந்தை சேக்ஸ்பியர், புனித யூதா கல்லூரி முன்னாள் முதல்வர் ஹென்றி, ஆசிரியர்கள் ஜோசப், நிக்சன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும்,கடற்கரையோர கிராம பஞ்சாயத்துகளை நகராட்சியுடன் சேர்ப்பதை நிறுத்தி மக்கள்தொகை அடிப்படையில் தனித்தனி கிரம பஞ்சாயத்தாக பிரிக்க வேண்டும் எனவும், வாணியக்குடி துறைமுக பணியை துரிதப்படுத்த கேட்பது எனவும், பல ஊர்களில் பாதியில் நிற்கும் தூண்டில் வளைவு பணிகளை உடனே துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் வாணியக்குடி, கோடிமுனை,மிடாலம்,இனையம், சைமன்காலனி ஆகிய பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பெடா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மீனவர் கல்வி வளர்ச்சி இயக்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Fisherman Education and Development Directorate ,PEDA ,Alangxi ,Brito Anorni Dalamata ,Union Vice President ,Enelraj ,Kurunthankode ,Albert ,Taragai ,Dinakaran ,
× RELATED மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி?...