×

தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்த வசதி: வாரியம் தகவல்

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிச் சட்ட விதிகள் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளர் நல நிதி தொழிலாளியின் பங்காக ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ.40 சேர்த்து மொத்தம் ரூ.60 வீதம் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியினை இணைய வழியாக செலுத்துவதற்கு வசதியாக வலைத்தளம் lwmis.lwb.tn.gov.in உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொழிலாளர் நல நிதியினை செலுத்தி உடனடியாக ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, இவ்வசதியை பயன்படுத்தி வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் 2024ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி, கொடுபடாத் தொகை போன்றவற்றை இணைய வழியாக செலுத்திடுமாறும் கேட்டுக் கெள்ளப்படுகிறது. வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும் வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

The post தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்த வசதி: வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Labor Welfare Board ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...