- அரசு ஐடிஐ
- திருவரம்பூர்
- திருவரம்பூர்
- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- வனத்துறை
- ஐடி வளாகம்
- ஜனாதிபதி
- கூத்தப்பர் மாவட்ட ஊராட்சி
- அரசு ஐ.டி.ஐ.
- கூத்தப்பார்
- மரம் நடவு விழா
- அரசு ஐடிஐ வளாகம்
திருவெறும்பூர், செப்.4: திருவெறும்பூர் அரசு ஐடிஐ வளாகத்தில் வனத்துறை சார்பில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகள் நட்டுவைத்தார். திருவெறும்பூர் அருகே கூத்தப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஐடிஐயில் மரக்கன்று நடும் விழா கூத்தப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. விழாவில் திருச்சி வனத்துறை சார்பில் மா, பலா, தென்னை, முருங்கை, வில்வம், வேம்பு, அரசை உட்பட சுமார் 450 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஐடிஐ மாணவ, மாணவிகளுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கூத்தப்பார் பேரூர் திமுக செயலாளர் தங்கவேல், கூத்தப்பார் பேரூராட்சி துணைத் தலைவர் பழனியாண்டி, திருச்சி வனசரக அலுவலர் ரவி சரக வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார் உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post திருவெறும்பூர் அரசு ஐடிஐ வளாகத்தில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.