×

மெட்ரோ ரயில் நிலையங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் பயண அட்டைகள் பெறலாம்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் முகவராக வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரேம்நாத் என்பருக்கு மெட்ரோ ரயில் பயண அட்டைகளை வழங்கி முதல் விற்பனையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் பிரதிப் யாதவ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பயண அட்டையை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முகவர்களுக்கு 5% கமிஷன் வழங்கப்படுகிறது. மேலும், பயண அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத்தள்ளுபடி அளிக்கப்படுகிறது. முகவர்களுக்கான விண்ணப்ப படிவம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கைப்பேசி செயலி அல்லது ஏதேனும் ஒரு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் 18604251515 என்ற எண்ணையும், customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்….

The post மெட்ரோ ரயில் நிலையங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் பயண அட்டைகள் பெறலாம்: மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Premnath ,Villivagat ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை...