×
Saravana Stores

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களுக்கு ₹18 கோடி அபராதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சிறையில் அடைத்தது.இந்நிலையில் இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, ஒரு படகில் இருந்த 12 மீனவர்களுக்கு தலா ₹1.5 கோடி (இலங்கை பணம்) அபராதம் செலுத்தவும், செலுத்த தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார்.

மற்றொரு படகில் இருந்த 10 பேர் மீதான வழக்கு விசாரணையின் போது, படகு உரிமையாளரையும் சேர்க்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை கூறி உள்ளது. அதற்கு இந்திய தூதரகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 10 பேரின் காவலை வருகிற 10ம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.

 

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களுக்கு ₹18 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Thoothukudi ,Sri Lankan Navy ,Daruwaikulam ,Judge ,Iona Wimalaratne ,Dinakaran ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்...