×

ஸ்ருதியின் டாட்டூவில் முருகனின் வேல்

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தனது உடலில் முருகனின் வேல்-ஐ டாட்டூவாக வரைந்துள்ளார். தெலுங்கில் ‘வால்டர் வீரய்யா’, ‘வீர சிம்ஹ ரெட்டி’ ஆகிய படங்களில் முறையே சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடித்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இப்போது ‘தி ஐ’ என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். அப்பா கமல்ஹாசன் நாத்திகவாதியாக இருந்தாலும் ஸ்ருதி, சிறு வயது முதல் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவராக வளர்ந்தார். பக்தி மூலம் தனக்கு நிம்மதி கிடைப்பதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது உடலில் முருகனின் வேல்-ஐ டாட்டூவாக வரைந்துள்ளார். அவர் கூறியபோது, ‘நான் எப்போதுமே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவள். முருகப்பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. இந்த டாட்டு மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன். மேலும் பச்சை குத்துவது என்பது என்னுடைய வழக்கங்களில் ஒன்று. தற்போது ஆன்மிகத்தின் தொடர்புடைய பச்சை குத்த வேண்டும் என்று விரும்பினேன், வேறு எதுவும் குறிப்பிட்ட காரணம் இல்லை. ஆன்மிகம் என்பது என்னை அடக்கமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

The post ஸ்ருதியின் டாட்டூவில் முருகனின் வேல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Murugan ,Chennai ,Shruti Haasan ,Srutihasan ,Siranjeevi ,Balakrishna ,Veera Simha ,Shrudi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு