×

அதிக வெடிபொருளை சுமந்து செல்லும் 2வது நாளாக பிரலே ஏவுகணை சோதனை

பாலசோர்: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘பிரலே’ ஏவுகணை, நேற்று 2வது நாளாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ராணுவத்துக்கு தேவையான புதிய ஆயுதங்கள், ஏவுகணைகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து, அவற்றை தயாரி்த்து வழங்கும் பணியை ‘ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (டிஆர்டிஓ) செய்து வருகிறது. இது நேற்று முன்தினம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகத்தை சேர்ந்த ‘பிரலே’ என்ற ஏவுகணையை, ஒடிசா மாநிலம், பாலசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. தரையில் இருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கிய அழிக்கும் இது,  150 கிமீ. முதல் 500 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை அழிக்க வல்லது.  இது, 500 கிலோ முதல் 1000 கிலோ வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்நிலையில்,  இந்த ஏவுகணை நேற்றும் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவி, தொடர்ந்து 2வது நாளாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, ஆயிரம் கிலோவுக்கு மேல் உள்ள வெடிபொருளை சுமந்து சென்று தாக்கும் வகையிலும், மாறுபட்ட தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஏவுகணையை அடுத்தடுத்த நாட்களி்ல டிஆர்டிஓ சோதனை செய்திருப்பது இதுவே முதல்முறை. *  நடுவானிலேயே தனது பாதையை மாற்றி, எதிரியின் இலக்கை தாக்கக் கூடிய சிறப்பு திறனை பிரலே ஏவுகணை பெற்றுள்ளது. …

The post அதிக வெடிபொருளை சுமந்து செல்லும் 2வது நாளாக பிரலே ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Tags : Balasore ,Dinakaran ,
× RELATED சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி