×

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க துப்பக்கியுடன் போலீசார் இரவு ரோந்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் கை துப்பக்கியுடன் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து போலீசாரும் இரவு கைத்துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தாரபுரம் பகுதியில் கடந்த 28-ம் தேதி அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கடப்பாரை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமுடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் நேற்று காங்கயம் பகுதியிலும் அடுத்தடுத்து 6 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது போன்ற தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொறுட்டு இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசார் துப்பக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, வெள்ளக்கோயில், மடத்துக்குளம் உள்ளிட்ட 24 காவல் நிலையங்களில் பணியாற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்றிரவு துப்பக்கியுடன் ரோந்து பணியில் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருப்பூர் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க துப்பக்கியுடன் போலீசார் இரவு ரோந்து appeared first on Dinakaran.

Tags : Tiruppur district ,Tiruppur ,Tiruppur District Police ,District Police ,Superintendent ,Abhishek Gupta ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே...