×
Saravana Stores

₹3.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ்

 

கரூர், செப். 3: கந்துவட்டி வழக்கில் கைத்து செய்யப்பட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கக்கோரி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 21ம்தேதி பதிவான கந்து வட்டி கொடுமை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம்(42) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கின் எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரை செய்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட கலெக்டர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், எதிரி, திருவேங்கடம் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய குளித்தலை டிஎஸ்பி மற்றும் பாலவிடுதி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்களை மாவட்ட எஸ்பி பாராட்டினார். மேலும், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் கந்து வட்டி, மீட்டர் வட்டி மற்றும் அதிகமான வட்டிகளுக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ₹3.62 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Kundas ,Karur ,SP ,Karur District SP ,Karur District Balavidthi Police ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டுக்கான வாலிபருக்கு குண்டாஸ்