- பிரதமர் மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செந்தில்குமார்
- நிலக்கோட்டை
- எல். ஏ
- ஐபி
- செந்தில்குமார்
- நீலக்கோட்டை திமுக வடக்கு
- தெற்கு
- மேற்கு ஒன்றியம்
- Ammayanayakanur
- நீலக்கோட்டை பெரூர் திமுக
- பிற்பகல்
- எல். ஒரு ஐபி
- தின மலர்
நிலக்கோட்டை, செப்.3: தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதற்கு வெளிநாட்டு முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருகிறார் என எம்.எல்.ஏ ஐபி.செந்தில்குமார் பேசினார். நிலக்கோட்டையில் திமுக வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை பேரூர் திமுக பொது உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால்உஷேன், ஒன்றியச் செயலாளர்கள் கரிகாலபாண்டியன், சௌந்தரபாண்டியன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை வரவேற்றார்.
கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐபி.செந்தில்குமார் பேசுகையில், தமிழக இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை முன்மாதிரியான மாநிலமாக்குவற்காக தமிழக முதல்வர் கடுமையாக உழைத்து தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளுக்குமேல் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்.
இந்த கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் காதர் முகைதீன், அறிவு, ஒன்றியத் துணைச்செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், மணிமேகலை, வேல்முருகன், ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் விஜயக்குமார் நன்றி கூறினார்.
The post தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதற்கு வெளிநாட்டு முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வருகிறார் எம்.எல்.ஏ ஐபி செந்தில் குமார் பேச்சு appeared first on Dinakaran.