- திருநங்கை
- சிவகங்கை
- transgenders
- திருநங்கைகள் நல சங்கம்
- ஜனாதிபதி
- அனிதா
- காரைக்குடி டி.டி.நகர், 4வது குறுக்குத் தெரு
சிவகங்கை, செப்.3: வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்தில மனு அளித்தனர். திருநங்கைகள் நலச்சங்கத் தலைவர் அனிதா மற்றும் திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி டிடி.நகர், 4வது குறுக்குத் தெருவில் திருநங்கைகள் 30பேர் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வருகிறோம். நாங்கள் வாடகைக்கு வீடு கேட்டுச் சென்றால், யாரும் கொடுப்பதில்லை. மேலும் நிரந்தர முகவரி இல்லாததால் அடையாள அட்டைகள் பெற முடியவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை கிடைத்தால் மட்டுமே வீட்டு முகவரியில் எங்களுக்கான அடையாள அட்டை உள்பட பல்வேறு ஆவணங்கள் கிடைக்கும். எனவே இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுத்து திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் திருநங்கைகள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.