ஏர்வாடி, செப். 3: ஏர்வாடியில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரோந்து சென்றனர். ஏர்வாடி- சிறுமளஞ்சி சாலையில் சென்றபோது அங்கு பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஏர்வாடி மறக்குடி தெருவை சேர்ந்த மல்கமலியின் மகன் அப்துல் ரஹீம் (23), ஏர்வாடி லெப்பை வளவு தெருவைச் சேர்ந்த ஷேக் மன்சூர் (21), ஏர்வாடி கட்டளை தெருவைச் சேர்ந்த முகமது இர்பான் (24) என்பது தெரியவந்தது. இருப்பினும் மூவரும் முன்னுக்குபின் முரணாகப் பேசியதால் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் பதுக்கிவைத்து கஞ்சா விற்றது அம்பலமானது. அத்துடன் மூவரும் தலா 10 கிராம் வீதம் மொத்தம் 30 கிராம் கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கிவைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார், அப்துல் ரகீம் உள்ளிட்ட 3 பேரையும் கைதுசெய்தனப். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post ஏர்வாடியில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.