×

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாம்பன் கடலில் ‘பகீர்’ பயணம்: தடையை மீறியதால் மரைன் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நாட்டுப்படகில் சுற்றுலாப் பயணிகள் சென்றது பற்றி மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் ஏற்றிச் செல்ல தடை உள்ளது. விதிகளை மீறி லாப நோக்கத்திற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் மீனவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாம்பன் கடலில் நாட்டுப்படகு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாலத்தை நேற்று சுற்றி பார்த்தனர். படகில் பயணம் செய்த எவரும் பாதுகாப்பு உபகரணங்கள் அணியவில்லை.

படகிலும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் எடுத்துச் செல்லவில்லை. படகில் இருந்தவர்கள் ஆபத்தை உணராமல் நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டு இருந்தனர். பாம்பன் கால்வாய் பகுதியில் காற்றின் வேகத்தால் நீரோட்டம் வேகமாக இருந்தது. ரயில் பாலங்கள் கீழே தடையை மீறி அபாயகரமாக படகில் கடந்து சென்றனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தடையை மீறி நாட்டுப்படகில் ஆட்களை ஏற்றியது குறித்து மீனவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாம்பன் கடலில் ‘பகீர்’ பயணம்: தடையை மீறியதால் மரைன் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sea ,Rameswaram ,Pampan Sea ,Dhanushkodi ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு!