×

பெரியபாளையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்

ஊத்துக்கோட்டை, டிச. 24: பெரியபாளையம் அருகே வெங்கல் மற்றும் பாகல்மேடு கிராமங்களில் சாலையோர கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டன. பெரியபாளையம் அருகே பாகல்மேடு கிராம பகுதியில் சாலையையொட்டி கடைகள் மற்றும் வீடுகள் அதிக அளவு ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளது . இதனால், பெரியபாளையத்தில் இருந்து வெங்கல், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஆவடி, திருநின்றாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்கள் வெங்கல், பாகல்மேடு ஆகிய பகுதியில் உள்ள சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.இதனால், சாலையோர ஆக்ரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கடந்த பிப்ரவரி மாதம்  உத்திரவிட்டார். அதன்பேரில், திருவள்ளூர் நெடுஞ்சாலை அதிகாரிகள் தலைமையில், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் மற்றும்  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் கடைகள் மற்றும் குடிசை வீடுகளை அகற்றினர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 2 மாதம் கால அவகாசம் கேட்டனர். பின்னர், அதிகாரிகள் அவகாசம் வழங்கினர். ஆனால், தற்போது 10 மாதமாகிறது. ஆனால், கடைகள் மற்றும் வீடுகளை அகற்றவில்லை. இதனால், நேற்று 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாகல்மேடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடிசை வீடுகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.  மேலும், தாசில்தாரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்றனர். இதை கேட்ட அவர் இடம் இல்லாதவர்களுக்கு பரிசீலனை செய்து வேறு இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் சிலர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகளை கட்டி இருந்தனர். இதன் காரணமாக அந்த வழியாக வரும் பொதுமக்கள் பாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு நிரந்தர தீர்வுகாணக்கோரி  வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், நேற்று நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், பொறியாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும்  நகராட்சி அலுலலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து போலீசார் உதவியுடன் வரதராஜபுரம் பகுதிக்குச் சென்று அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளில் மின் இணைப்புகளை துண்டித்து, பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதுமாக இடித்து அகற்றினார்கள்.திருத்தணி முருகன் கோயில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கடந்த  14ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் துவக்க விழாவிற்கு வந்தனர். அப்போது மலைப் படிகள் வழியாக சென்றபோது படிகள் மற்றும் சன்னதி தெரு  ஆகிய இடங்களில் வியாபாரிகள் பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதையடுத்து இந்து அறநிலைத் துறை ஆணையர் மற்றும் அமைச்சர் உத்தரவின் பேரில் கடைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.  இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, திருத்தணி ஏஎஸ்பி சாய் பரணி, கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் ரமணி, திருத்தணி தாசில்தார் ஜெயராணி ஆகியோர் முன்னிலையில் சன்னதி தெரு, மலைப் படிகள் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்….

The post பெரியபாளையம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Vengal ,Bhagalmedu ,Periyapalai ,
× RELATED பெரியபாளையம் அரசு பள்ளி வளாகத்தில்...