- தியாட்டூர் பெரிய கண்மாய் பாலம்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சத்தியமங்கலம் தியத்தூர் பெரிய கண்மாயில்
- ஒக்கூர் தியத்தூர் சாலை
- ஆவுடையார்கோயில் தாலுக்கா
புதுக்கோட்டை, செப்.2: தமிழகத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் அனைத்து பருவமழை காலங்களிலும் தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஆவுடையார்கோவில் தாலுகாவில் ஒக்கூர் தீயத்தூர் சாலையில் சடையமங்கலம் தீயத்தூர்பெரிய கண்மாயில் உபரி நீர் செல்ல ஏதுவாக 80 மீட்டர் நீளமுள்ள தரை பாலம் 30 ஆண்டுகளுக்குப் முன்பாக கட்டப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் இந்த பாலத்தை பொதுமக்கள் அச்சத்துடன் மிகுந்த சிரமத்திற்கு இடையில் கடந்து வந்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று உயர்மட்ட பாலம் கட்ட ரூ.1 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்படி ஆறு கண்கள் கொண்ட உயர்மட்ட பாலம் நெடுஞ்சாலை துறை மூலம் கட்டப்பட்டு பொதுமக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை இப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். விரைவில் திறப்பு விழா
The post புதுக்கோட்டை அருகே ₹1.35 கோடியில் தீயத்தூர் பெரிய கண்மாயில் பாலம் appeared first on Dinakaran.