×

வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு

 

வேதாரண்யம், செப்.2: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமத்தில் அமைந்துள்ள ஆனந்தவள்ளி சமேத அமராபதீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்பு புனித நீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு இறைவனையும், நந்திகேஸ்வரரையும் வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.

வேதாரண்யம் வேதமிருத ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், ஏரிக்கரை காசி விஸ்வநாதா்கோயில், தோப்புத்துறை கைலாசநாதர் கோயில், வடமறைக்காடர் கோயில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோயில், கோடியக்காடு குழவர் கோயில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோயில், வெள்ளப்பள்ளம் சிவன் கோயில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர், ஆகிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆங்காங்கே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post வேதாரண்யம் பகுதி சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Shiva ,Anandavalli Sametha Amarapatheeswarar temple ,Naluvedapathi village ,Vedaranyam taluka ,Nagapattinam district ,Shani Pradosha ,Shani ,
× RELATED சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?