- தாய் பால் வார விழிப்புணர்வு
- வேதாரண்யம் தாலுகா
- கோடியக்காடு
- பஞ்சாயத்து
- வேதாரண்யம்
- தாய் பால் வார விழிப்புணர்வு பேரணி
- வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சி
- தாய்லாந்து பால் வார விழா
- கோடியக்கோட்டை
- க்ரீட் தொண்டு நிறுவனம்
- குழந்தை நிதி
- கோடியக்காடு ஊராட்சி
- ஜனாதிபதி
- தமிழுமணி
- தாலுகா கொடிக்காடு
- தின மலர்
வேதாரண்யம்,செப்.2: வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் தாய்பால் வார விழிப்புணர்வு பேரணி நடந்தது. வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் தாய்பால் வார விழாவை கிரீடு தொண்டு நிறுவனமும் சைல்ட்பண்ட் நிறுவனமும் இணைந்து நடத்தியது. நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையேற்று தாய்பால் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் தாய்பால் முக்கியத்துவ விழிப்புணர்வு பாதாகளை ஏந்தி கோடியக்காடு கிராம முழுவதும் சென்றனர். கோடியக்காடு மற்றும் கோடியக்கரை கிராமங்களை சேர்ந்த ஏரளமான தாய்மார்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கிரீடு நிறுவனத்தின் சமூக ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். கோடியக்கரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹாஜி அப்துல் சலாம் தாய்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். கோடியக்காடு சுந்தரம் அரசு உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோடியக்காடு கிராம சுகாதார செவிலியர் சுலோச்சனா, கோடியக்காடு கிராம அங்கன்வாடி மைய பணியாளர் சங்கீதா, கோடியக்கரை கிராம அங்கன்வாடி மைய பணியாளர் தஸ்பினாபேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் தாய்பால் வார விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.