×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் போபண்ணா அல்டிலா ஜோடி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனேசியா) ஜோடி தகுதி பெற்றுள்ளது. 2வது சுற்றில் செக் குடியரசின் கேதரினா சினியகோவா – ஜான் பியர்ஸ் (ஆஸி.) ஜோடியுடன் மோதிய போபண்ணா இணை 0-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் 1 மணி, 13 நிமிடம் போராடி வென்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), ஹடாட் மாயா (பிரேசில்), கரோலினா முச்சோவா (செக்.), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), லியுட்மிலா சாம்சனோவா (ரஷ்யா) தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இத்தாலியின் யானிக் சின்னர், டானில் மெட்வதேவ் (ரஷ்யா), டாமி பால் (அமெரிக்கா), அலெக்ஸ் டி மினார், ஜார்டன் தாம்சன் (ஆஸி.), ஜாக் டிரேப்பர் (இங்கிலாந்து) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் போபண்ணா அல்டிலா ஜோடி appeared first on Dinakaran.

Tags : Bopanna Aldila ,US Open ,New York ,India ,Rogan Bopanna - Altila Sudjiadi ,Indonesia ,US Open Grand Slam ,Czech ,Republic ,Katarina Siniakova ,John ,Bopanna Altila ,Dinakaran ,
× RELATED நியூயார்க் நகரில் உள்ள இரவு...