×
Saravana Stores

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடங்கியது

கூடலூர், செப். 1: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. கடந்த 2 வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடிக்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,488.19 கன அடி நீர்வரத்து உள்ளது. அணை நீர்மட்டம் 130.45 அடியாக இருந்தது. குடிநீர் தேவை, விவசாய பாசனம் மற்றும் நீர் மின்நிலைய மின் உற்பத்திக்காக தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு