×
Saravana Stores

மண்டல அளவிலான செஸ் போட்டி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்

வீரவநல்லூர், செப்.1: மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான செஸ் விளையாட்டு போட்டி அம்பாசமுத்திரத்தை அடுத்த இடைகால் மெரிட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் செல்வகணேஷ், கார்த்திகேய கண்ணா, வசந்தகுமார், முகமது நஸ்வான், நூர் முகமது ஆகியோர் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்கள் கோவையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களுக்கு ஸ்காட் சேர்மன் கிளிட்டஸ் பாபு, துணை சேர்மன் அமலி கிளிட்டஸ் பாபு, கல்லூரி முதல்வர் மணிமாறன், நிர்வாக அலுவலர் சித்திரை சங்கர், உடற்கல்வி இயக்குநர்கள் அன்வர்ராஜா, வண்டி மலையான் பாராட்டு தெரிவித்தனர்.

The post மண்டல அளவிலான செஸ் போட்டி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Scott Polytechnic College ,Zonal Chess Tournament ,Veeravanallur ,Scott Polytechnic ,Inter-Polytechnic College Regional Chess Tournament ,Merit ,Polytechnic College ,Ambasamutra ,Dinakaran ,
× RELATED சேரன்மகாதேவியில் தபால் அலுவலக ஊழியர் வீட்டில் பணம் திருட்டு