- X
- பிரேசில்
- சாப்பலோ
- உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி
- போல்சனாரோ
- 2022 பொதுத் தேர்தல்
- ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா
சாபாலோ: பிரேசிலில் கடந்த 2022ல் நடந்த பொதுத்தேர்தலை இழிவுபடுத்தியும், அதிபர் லூயஸ் இனாசியோ லுலா டி சில்வா ஆட்சியை கவிழக்க சதி செய்ததாகவும் முன்னாள் அதிபர் போல்சொனரோ ஆதரவாளர்களான சில தீவிர வலதுசாரிகளின் எக்ஸ் தள கணக்குகளை முடக்க அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரலில், தடை செய்யப்பட்ட சில கணக்குகள் மீண்டும் செயல்படுத்தியதற்காக எக்ஸ் நிறுவனம் பிரேசிலில் சட்டப்பூர்வ பிரதிநிதியை 24 மணி நேரத்தில் நியமிக்க கெடு விதிக்கப்பட்டது. இந்த 24 மணி நேர கெடு முடிந்ததைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவின்படி எக்ஸ் தளத்திற்கான தடையை அமல்படுத்தும் நடவடிக்கையை பிரேசில் அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான அனாடெல் எடுக்கத் தொடங்கியது. இது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post நீதிபதி உத்தரவுக்கு இணங்காததால் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு தடை appeared first on Dinakaran.