×

கருவேல முட்செடிகள் அகற்றும் பணி தீவிரம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி நடவடிக்கை

 

அரியலூர், ஆக. 31: அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நெடுஞ்சாலையோரமுள்ள கருவேல முட்செடிகளை அகற்றும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டப்போது ;

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அறிவுறுத்துதல் படியும் தலைமை பொறியாளர் நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சென்னை அவர்களின் வழிகாட்டுதலின் படியும் சாலையோரங்களில் உள்ள கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் அரியலூர் நெடுஞ்சாலை கோட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்குமாறு கோட்டப் பொறியாளர் வடிவேல் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

The post கருவேல முட்செடிகள் அகற்றும் பணி தீவிரம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Highways department ,Ariyalur ,Ariyalur district ,Department of Highways ,Minor Ports ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இலவச பட்டா நிலத்தை அளந்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு