- அலமாபாடி மையம்
- தர்மபுரி
- ஆலம்பாடி கால்நடை ஆராய்ச்சி மையம்
- பல்லனஅள்ளி
- கரிமங்கலம் ஒன்றியம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- ஆலம்பாடி
- மையம்
- தின மலர்
தர்மபுரி, ஆக.31: காரிமங்கலம் ஒன்றியம், பல்லனஅள்ளி கிராமத்தில் 31.3 ஏக்கர் பரப்பளவில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு ₹4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிர்வாக கட்டிடம் மற்றும் மாட்டு கொட்டகைகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், மைய வளாகத்தில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர், தர்மபுரி கால்நடை பராமரிப்புத்துறையினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஆலம்பாடி மாட்டினத்தில் இருந்து பெறப்படும் பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளான பால்கோவா மற்றும் சாணக்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரம் மற்றும் அவற்றின் முக்கியத்துவம், ஆலம்பாடி மாட்டினம் குறித்து ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முரளி பேசினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post ஆலம்பாடி மையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.