×
Saravana Stores

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழியாக சுற்று வட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: தென்னக பயணிகள் ஆலோசனை குழு கோரிக்கை

காஞ்சிபுரம். ஆக. 31: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழியாக சுற்று வட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஏர்யா, நேற்று முன்தினம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழுவினர், ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:
தென்னக இரயில்வே, சென்னை கோட்டம், காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் ரிசர்வ்ரேஷன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்து. கடந்த கொரோனாவுக்கு பிறகு காலை 8 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்குகிறது. இதை மீண்டும் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் நலன் கருதி ரிசர்வ்ரேஷன் கவுண்டர் இயக்க வேண்டும். திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக காலை, மாலை இயங்கும் பயணிகள் விரைவு ரயிலை மெமோ பயணிகள் ரயிலாக ஆக பொதுமக்கள் நலன் கருதி இயக்க வேண்டும்.

சென்னை கடற்கரை முதல் சென்னை சென்ட்ரல் வழி தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கமாக சுற்று வட்ட ரயிலை இயங்கி வந்ததை நிறுத்தியதை மீண்டும் வட்ட வடிவ ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலங்களில் சுற்று வட்ட ரயில் ஒன்றரை ஆண்டாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இயக்குமாறு ஆறு மாத காலமாக தொடர்ந்து இந்த ரயில் இயக்கினால் மதிய நேரம் இயக்கினால் செங்கல்பட்டு, தாம்பரம், அதேபோல், அரக்கோணம், திருவள்ளுர் வரை செல்லும் பொதுமக்களுக்கு நன்மையாக அமையும் எனவே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சென்னை கோட்டம், செங்கல்பட்டு முதல்அரக்கோணம் 75கிமி வரை (வழி-வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர்) சுமார் 75 கிமீ தூரத்திற்கு கூடுதல் புதிய ரயில்பாதை அமைத்து தர வேண்டும். செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை சுமார் 40 கிமீ தூரம் புதிய கூடுதல் ரயில்பாதை அமைத்து தரவேண்டும். தென்னக ரயில்வே, சென்னை கோட்டத்தில் உள்ள திண்டிவனம் – நகரி (வழி) தெள்ளார், வந்தவாசி, செய்யாறு, கலவை, ஆற்காடு, ராணிப்பேட்டை, நாகலாபுரம் – நகரி வரை சுமார் 120 கிமீ தூரம் புதிய ரயில்பாதை அமைத்து தர கடந்த 30 வருடமாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, பத்து ஆண்டுகளில் ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மத்திய, மாநில அரசு சுமார் 1000 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். காஞ்சிபுரம் – சென்னை பகல் 11 மணிக்கு பிறகு மாலை வரை ரயில் வசதி இல்லை. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரை இயங்கும் மின்சார ரயில் 45 சர்வீஸ் இயங்குகின்றன. இதில், 3 அல்லது 5 ரயிலை காஞ்சிபுரம் வரை இயக்குமாறு நண்பகல், மதியம், மாலை என இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு – அரக்கோணம் வழி – பாலூர், காஞ்சிபுரம் திருமால்பூர் வழியாக ஷெட்டில் சர்வீஸ் இயக்குமாறு தென்னக ரயில்வே, சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்களில் உள்ள நவீன கட்டணக் கழிப்பிடமானது திறக்கப்படாமல் பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட ஒவ்வொரு ரயில் நிலையத்தில் திறக்கப்படாமல் பாழாகிறது. அதைத் தொடர்ந்து திறந்து வைக்க வேண்டும். இல்லையேல் சென்னை ரயில்வே கோட்டத்தில் நவீன கழிப்பிடம் ஒப்பந்தத்தை ரத்து வேண்டும். சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் அரக்கோணம் – காஞ்சிபுரம், கூரம் கேட் ரயில் நிறுத்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. நிறுத்தப்பட்டதை மீண்டும் செயல்படுத்த கூரம் கேட் புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைத்து தரவேண்டும். திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக காலை, மாலை இயங்கும் பயணிகள் விரைவு ரயிலை மெமோ பயணிகள் ரயிலாக ஆக பொதுமக்கள் நலன் கருதி இயக்க வேண்டும்.வேன்.

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழியாக சுற்று வட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: தென்னக பயணிகள் ஆலோசனை குழு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kanchipuram, Tirumalpur ,Southern Passenger Advisory Committee ,Kanchipuram ,Southern Railway Passenger Advisory Committee ,Tirumalpur ,Chennai Railway ,Divisional Manager ,Vishwanath Airya ,Chengalpattu, ,Kanchipuram, ,Dinakaran ,
× RELATED போனசாக வழங்கிய பணத்தை சம்பளத்தில்...