×
Saravana Stores

பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: சிபிஐ ஆபீசில் 4 வாரம் ஆஜராக உத்தரவு

மதுரை: சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், ‘‘மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியமானது. அப்போது தான் உண்மை தெரியவரும். முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும்’’ என வாதிடப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக டிஎஸ்பி காதர் பாட்ஷா தரப்பில், மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, ‘‘மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 4 வார காலத்திற்கு தினசரி காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இரு நபர் பிணை பத்திரத்துடன், ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்’’ என நிபந்தனை விதித்துள்ளார்.

The post பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: சிபிஐ ஆபீசில் 4 வாரம் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pon Manikavel ,CBI ,Madurai ,IG ,Idol Anti-Smuggling Unit ,I-Court ,Judge ,D. Bharatasakkaravarthy ,Dinakaran ,
× RELATED குட்கா முறைகேடு வழக்கில் ஆவணங்களை...