×

பொங்கல் பண்டிகை.. இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க டெண்டர் கோரியது கைத்தறித்துறை!!

சென்னை : பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறித்துறை டெண்டர் கோரியது. வரும், 2025 பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, 1 கோடியே, 77 லட்சத்து, 64,476 சேலைகள், 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தரம் பரிசோதித்து, தேவை பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக, 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, கூடுதலாக தேவைப்படும் தொகை மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறித்துறை டெண்டர் கோரியது. விசைத்தறி சேலைகளுக்கு 3050 மெ.டன் பருத்தி கலர் கோன் நூல் வாங்க டெண்டர். விசைத்தறி வேட்டிகளுக்கு 3597 மெ.டன் பாலிகாட் கிரே பாவு நூல் வாங்க டெண்டர் கோரப்பட்டது. 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்க டெண்டர் கோரியது.

The post பொங்கல் பண்டிகை.. இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க டெண்டர் கோரியது கைத்தறித்துறை!! appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Department of Handicrafts ,Chennai ,Handicrafts Department ,2025 Pongal Festival ,
× RELATED வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா...