×
Saravana Stores

பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கோவை: பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளைத் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; குரங்கு அம்மை நோய் தடுப்புப் பணிகள் தொடர்பாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்.

முதல்வர் மருந்தகங்கள் எந்ததெந்த பகுதிகளில் அமைய உள்ளது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. விலை உயர்ந்த மருந்துகள் முதல்வர் மருந்தகங்களில் மலிவு விலையில் கிடைக்கும் என்றும் கூறினார்.

The post பொங்கல் தினத்தன்று தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் appeared first on Dinakaran.

Tags : Pongal Day ,Tamil Nadu ,Minister ,Subramaniam ,Govai ,Minister of Public Welfare ,Measles ,Goa Airport ,
× RELATED மக்களிடம் பெருத்த வரவேற்பையும்,...