ஈரோடு: தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு அளித்தனர். பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமம், குட்டப்பாளையம், எழுதிங்கள்பட்டியில் சுமார் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.அருகில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆயில் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியிடப்படும் நச்சுப் புகையால் எழுதிங்கள்பட்டியில் உள்ள பொதுமக்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சுதிணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், தாலுகா செயலாளர் அஜித்குமார், எழுதிங்கள்பட்டி கிளைச் செயலாளர் பிரசாந்த் மற்றும் கிராம மக்கள் நேற்று முன் தினம் சிப்காட், மாசுகட்டுப்பாடு அலுவலத்தில் மனு அளித்தனர். அதன் பேரில், அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
The post தொழிற்சாலை புகையால் கிராம மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.