- YSR காங்கிரஸ்
- தெலுங்கு தேசம் கட்சி
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- ராஜ்ய சபா
- மோபிதேவி வெங்கட ரமணா
- பீடா மஸ்தான் ராவ்
- தின மலர்
திருமலை: ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மோபிதேவி வெங்கட ரமணா மற்றும் பீடா மஸ்தான் ராவ். மோபிதேவி வெங்கட ரமணாவுக்கு ஜூன் 2026 வரையும், தொழிலதிபரும் மாநிலங்களவை உறுப்பினருமான பீடா மஸ்தான் ராவுக்கு 4 ஆண்டுகள் வரை பதவி உள்ள நிலையில் இருவரும் நேற்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
மேலும் தங்களது கட்சி பதவியையும் ராஜினாமா செய்வதாக அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினர். இருவரும் விரைவில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளனர். மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் இல்லாத தெலுங்குதேசம் கட்சி, இடைத்தேர்தல் நடப்பதன் மூலம் தனது பலத்தை அதிகரித்து கொள்ள செய்வதற்கான வாய்ப்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் வியூகத்துடன் செயல்படுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
The post ஒய்எஸ்ஆர் காங்கிரசின் 2 எம்பிக்கள் ராஜினாமா: தெலுங்கு தேசம் கட்சியில் சேர முடிவு appeared first on Dinakaran.