திருமலை: ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவதொரு புதிய நோய் மக்களை பயமுறுத்திக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது உலக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது குரங்கு அம்மை. காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை அதிகரித்ததை தொடர்ந்து பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரபிரதேஷ் மேட்டெக் பொருளாதார மண்டலத்தில் ஏ.எம்.டி.இசட் மற்றும் டிரான்சிஸியா டியோஜினிஸ்டிக் இணைந்து குரங்கு அம்மை தொற்றுநோய் கண்டறியும் ஆர்.டி.- பி.சி.ஆர். பரிசோதனை தொகுப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆர்.டி.- பி.சி.ஆர். கிட் ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஎஸ்சிஓ ஆல் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குரங்கு அம்மை பரிசோதனை கிட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
The post குரங்கு அம்மை நோய் கண்டறியும் பரிசோதனை கிட் வெளியீடு appeared first on Dinakaran.