×

பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் குழு நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து அதில் பழுது நீக்கவும், நெடுஞ்சாலைத்துறை பணியிடங்கள் குறித்து ஆராயவும் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்டு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த தற்போது உள்ள சில அலகுகளை மாற்றியமைத்து பணிகளைப் பகிர்ந்து துறையின் செயல் திறனை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைக்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறையில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு பெறப்பட்டு ஊதியம் பெற்று வழங்கும் நிலையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை கண்டறிந்து பழுதுநீக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை கீழ் கட்டப்பட்ட பாலங்களை ஆய்வு செய்து பழுது ஏற்பட்டிருந்தால் உடனுக்குடன் சீரமைக்கவும் பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு அமைத்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. நெடுஞ்சாலை இயக்குநர் செல்வதுரை, கட்டுமான பாராமரிப்புத்துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் குழுவில் உள்ளனர். சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை மேலாளர் பழனிவேல், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை துணை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

The post பாலங்களை ஆய்வு செய்ய 5 பேர் குழு நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை;...