×

4 மாதத்தில் ₹218.64 கோடி பயிர்க்கடன்

சேலம், ஆக.29: சேலம் மாவட்ட தொடக்க வேளாண்ைம கூட்டுறவு சங்கங்களில் கடந்த 4 மாதத்தில் 22,865விவசாயிகளுக்கு ₹218.64 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ₹16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். பட்டிலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும்.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கி, ஆண்டு குறியீட்டினை முழுமையாக எய்திட தனிக்கவனம் செலுத்த வேண்டும். புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு பயிர்கடன் வழங்க முன்னுரிமை அளிக்குமாறு அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 5 பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ₹1650 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கு குறியீட்டினை எய்திடும் வகையில் கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதத்தில் ெதாடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 22,365 விவசாயிகளுக்கு ₹218.64 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், புதியஉறுப்பினர்களாக சேர்ந்த 3072 பேருக்கு ₹24.99 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ₹1650 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்புகொண்டு கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்களில் பெற்று பயனடையலாம்.இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக்கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, அந்தந்த கடனுக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post 4 மாதத்தில் ₹218.64 கோடி பயிர்க்கடன் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District ,Primary Agricultural Cooperative Societies ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரியானா கொள்ளையரை பிடித்த காவல்துறை...