வைகுண்டம், ஆக.29: தென்திருப்பேரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஏராளமான வயல்வெளிகள் உள்ளன. அதனால் கால்நடை வளர்ப்போர் தினமும் அதிகாலை மேய்ச்சலுக்காக கால்நடைகள் காடுகள் நோக்கி செல்வது வழக்கம். நேற்று காலையில் மாடுகள் மேய்ச்சலுக்காக தென்திருப்பேரை அருகே அண்ணா நகர் பகுதியில் நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடந்து சென்றது. அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த டேங்கர் லாரி மாடுகள் மீது மோதியது. அதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மற்றொரு மாடு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. மாட்டின் மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதசாரிகள் செல்ல நடைபாதை இடத்தில் மின்விளக்கு அமைக்க நடப்பட்டிருந்த கம்பத்தில் மோதியதில் அந்தக் கம்பம் சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டேங்கர் லாரி மோதி மாடு பலி appeared first on Dinakaran.