×

பேரிகார்டில் பைக் மோதி கூடங்குளம் விஞ்ஞானி பலி

நெல்லை: கூடங்குளம் நோக்கி பைக்கில் சென்ற பேரிகார்டில் பைக் மோதி விஞ்ஞானி பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் பினா சாகர், சாஸ்திரிவார்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய ஸ்ரீவத்சவா (28). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 2022 முதல் 5 மற்றும் 6வது அணு உலைக்கான விஞ்ஞான அலுவலராக வேலை செய்து வந்தார். கடந்த 26ம் தேதி பழவூர் அருகே செட்டிகுளம் விலக்கில் இருந்து கூடங்குளம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். உடன் நண்பர் யான்பிரகாசும் (24) சென்றார். கண்ணன்குளம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை பேரிகார்டு மீது பைக் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆதித்ய வத்சவா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யான் பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

The post பேரிகார்டில் பைக் மோதி கூடங்குளம் விஞ்ஞானி பலி appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Aditya Srivatsava ,Pina Sagar, Shastriwart, Madhya Pradesh ,Kudankulam nuclear power plant ,
× RELATED குவாரியில் பாறை சரிந்து டிரைவர் பலி