×

தொண்டி அருகே ரோட்டில் சிதறிக் கிடந்த ஜெலட்டின் குச்சிகள்: போலீசார் தீவிர விசாரணை

தொண்டி: தொண்டி அருகே, ரோட்டில் சிதறிக் கிடந்த ஜெலட்டின் குச்சிகளை சேகரித்த போலீசார், இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே, ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில், எஸ்பி பட்டினம் போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது, பாசிபட்டினம் அருகே, ரோட்டில் ஜெலட்டின் குச்சிகள் சிதறிக் கிடந்தன. அந்தக் குச்சிகளை இருவர் சேகரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இடத்தில் சோதனை செய்தபோது செல்போன் ஒன்று கிடந்தது. அதன் மூலம் தொடர்பு கொண்டு விசாரணை செய்ததில், ‘தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான செல்போன் என்பதும், மீன் பிடிப்பதற்கு ஜெலட்டின் குச்சிகளை வாங்கி சென்றிருக்கலாம் என்பதும், முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. ஜெலட்டின் குச்சிகளை சேகரித்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

The post தொண்டி அருகே ரோட்டில் சிதறிக் கிடந்த ஜெலட்டின் குச்சிகள்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Ramanathapuram district ,Rameswaram east coast ,Thondi, SP ,Pattinam ,Dinakaran ,
× RELATED தொண்டியில் விதைப்பு பணி தீவிரம்