×

தேனியில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு

*வாகன ஓட்டிகள் அவதி

தேனி : தேனியில் மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலையில் பிரபல நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், பிரபல மருத்துவமனைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இதனால், இச்சாலைகளில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.இச்சாலையில் பொருள்களை வாங்க குடும்பத்துடன் வரும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் இச்சாலையின் ஓரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு பொருள்களை வாங்கி விட்டு வாகனங்களை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம். இதற்காக வாகனங்கள் நிறுத்துவதற்காக போக்குவரத்து துறை, இச்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

தேனி நகர் மதுரைச் சாலையில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் கடைகள் முன்பாக இடங்களை ஆக்கிரமித்து சிமெண்ட் தளம் அமைத்துள்ளனர். இதில் இவர்களின் நிறுவன வாகனங்களை நிறுத்த மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதனால், ஆக்கிரமிப்பு இடங்களை தவிர்த்து, தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையின் தார்ச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். சாலையின் நடுவே டிவைடர் உள்ள நிலையில், மிகக் குறுகியதாக உள்ள இச்சாலையில், தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

ஆகையால் பழைய பஸ் நிலையம், நேரு நிலை, பழைய பஸ் நிலைய பிளாட்பாரம் முதல் தேனி மதுரை சாலையில் முக்கிய வர்த்தக நிறுவனங்களின் முன்னாள் வாகனங்களை நிறுத்துவதையும், ஆக்கிரமிப்பு கடைகள் அமைப்பதையும் போக்குவரத்து போலீசார் அக்கற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேனியில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு appeared first on Dinakaran.

Tags : Theni ,Avadi Theni ,Madurai road ,Periyakulam road ,Kampam road ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாக கொண்டாட்டம்