×

சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் பசு சாணத்தில் விநாயகர் சிலை

மண்டபம்,ஆக.28: விநாயகர் சதுர்த்தி வருவதையடுத்து மண்டபத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பசு மாடு சாணத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளன்று பொதுமக்கள் சாலை ஓரம் கடைகளில் ரசாயன பொருள்கள் கலந்து தயாரிக்கப்படும் விநாயகர் சிலையை வழிபாட்டுக்காக வாங்குவது வழக்கம். இந்நிலையில் வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி மண்டபத்தை சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் சண்முகநாதன் பசு சாணத்தில் விநாயகர் சிலை செய்து வருகிறார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இயற்கைக்கு மாசு இல்லாமலும், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் மாசற்ற விநாயகர் சிலைகளை பசு மாடுகளின் சாணம்,ஹோமியம்,கஸ்தூரி மஞ்சள்,பல்வேறு மரங்களில் சேகரிக்கப்பட்ட பசையின் பொடிகள் அடங்கிய பொருள்களை வைத்து தயாரித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி நாட்களுக்குள் 500 சிலைகள் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

The post சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில் பசு சாணத்தில் விநாயகர் சிலை appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Mandapam ,Ganesha Chaturthi ,
× RELATED நாடு முழுவதும் தொடரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்..!!