×

திண்டுக்கல்லில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு: 361 பேரில் 276 பேர் ‘செலக்ட்’

 

திண்டுக்கல், ஆக. 28: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டிற்கு நடத்தும் இரண்டாம் நிலை காவலர், (ஆண் மற்றும் பெண்) சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்வான கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி தேர்வு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சீருடை பணியாளர் தேர்வு மேற்பார்வையாளர் காவல் துறை துணை தலைவர் ஜெயந்தி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் முன்னிலை வகித்தனர்.

மொத்தம் 1126 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது. நேற்றைய உடல் தகுதி தேர்வில் மொத்தம் 600 நபர்களில் 361 நபர்கள் கலந்து கொண்டனர். 239 நபர்கள் கலந்து கொள்ளவில்லை, கலந்து கொண்ட 361 நபர்களில் 276 நபர்கள் தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 85 நபர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்வான 276 நபர்களுக்கு
இரண்டாம் கட்ட தகுதி தேர்வு நாளை ஆக.29ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் ஆக.30ம் தேதி வரை உடல் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post திண்டுக்கல்லில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு: 361 பேரில் 276 பேர் ‘செலக்ட்’ appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu Uniformed Staff Selection Commission ,Dinakaran ,
× RELATED எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்...