×
Saravana Stores

குஜராத்தில் விடாது பெய்யும் கனமழை: 7 பேர் பலி

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த சில தினங்களாக இயல்புக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் மழையால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வௌியிட்ட அறிக்கையில், “நேற்று முன்தினம் திங்கள்கிழமை மழை தொடர்பான விபத்துகளால் 7 பேர் பலியாகி விட்டனர். காந்தி நகர், கெடா, வதோதரா மாவட்டங்களில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். ஆனந்த் மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவரும், 2 பேர் வௌ்ள நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். காந்திநகர், பஞ்சமஹால், நவ்சாரி, வல்சாத், வதோதரா, பரூச், கெடா, பொடாட் மற்றும் ஆரவல்லி ஆகிய மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கயைாக 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ” என தெரிவித்துள்ளர்.

மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “
மோர்பி மாவட்டம் தங்கரா தாலுக்காவில் நேற்று காலை 6 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 347 மிமீ மழை பெய்துள்ளது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

The post குஜராத்தில் விடாது பெய்யும் கனமழை: 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,AHMEDABAD ,Dinakaran ,
× RELATED டிரா ஆகுமா தமிழ்நாடு-ரயில்வே போட்டி?