- AIDUC
- கிருஷ்ணா
- தஞ்சாவூர்
- கிருஷ்ண ஜெயந்தி
- கண்ணன் பிறந்தநாள் விழா
- கரந்த கிருஷ்ணசுவாமி யாதவ கண்ணன் கோவில்
- தஞ்சாவூர்
- கிருஷ்ணாஸ்
- ஏஐடியுசி
- தஞ்சாவூரின்
- பெருமாள்
தஞ்சாவூர், ஆக. 27: தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணசுவாமி யாதவ கண்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, இன்று முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை ‘கண்ணன் பிறப்பு பெருவிழா’ நடக்கிறது. இது தஞ்சையில் தெற்கு நோக்கிய கிருஷ்ணன் கோவிலாகும். இங்கு, ஐந்து கிருஷ்ணன்களை தரிசனம் செய்யலாம். இதில், ருக்மணி, சத்தியபாமா சமேத யாதவ கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யாதவ கிருஷ்ணனை தரிசனம் செய்தார்கள்.
நவநீதகிருஷ்ணர் கோயிலில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின்னர், எண்ணெய் தடவப்பட்ட 40 அடி உயர வழுக்கு மரத்தில் இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து ஏறினார்கள். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறியபோது, அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இரவு உறியடி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், 4 வீதிகளிலும் கிருஷ்ணர் ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பூச்சொரிதல், ‘கோ-பூஜை’ ஆகியன நடைபெற்றன. பல குழந்தைகள் கிருஷ்ணன் வேடத்தில் வந்து பங்கு பெற்றனர். இதேபோல், மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த வரகூர் கோயிலிலும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது.மேலும், தஞ்சாவூர் சகாநாயக்கன் தெருவில் உள்ள பூலோக கிருஷ்ணன் கோவிலில் ருக்மணி, சத்தியபாமா சமேத பூலோக கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர், ஆக. 27: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பழுதடைந்த ‘மூன்றாவது கண்’ எனப்படும் சிசிடிவி கேமராக்கள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தொழில் நுட்ப வசதிகள் அதிகரித்து வரும் வேளையில் குற்றங்கள், விபத்துக்களும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. இதற்காக, பொதுமக்களின் அதிவேக வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. அதில், விபத்து, திருட்டு, பெண் வன்கொடுமை, குழந்தைகள் பாதுகாப்பு, இணைய வழி மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் எண்ணிலடங்காது. ஆனால், இந்த குற்றங்களை தடுக்க போலீசார் பொதுமக்களைவிட, ‘மூன்றாவது கண்’ எனப்படும் சிசிடிவி கேமராக்களைத் தான் பெரிதும் நம்புகின்றனர்.
எனெனில், குற்றங்களை கண்களால் கண்டாலும், பொதுமக்களில் படித்தவர்கள் கூட போலீஸ் நிலையங்கள் செல்லவோ, நீதிமன்றம் செல்லவோ தயக்கம் காட்டுகின்றனர். மேலும், காவல்துறையும், நீதிமன்றங்களும் பொதுமக்களின் சாட்சியங்களைவிட, வீடியோ பதிவுகளை தீர ஆய்வு செய்த பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதும், பணிகளை முடிப்பதில் சாத்தியமாகின்றன.
எனவே, காவல்நிலையம், வருவாய் அலுவலகம் தொடங்கி, பள்ளி, கல்லூரிகள், தனியார் வணிக நிறுவனம், பூங்காக்கள், தனியார், அரசு விடுதிகள், மருத்துவமனைகள், மாவட்ட சாலைகள், முக்கிய சந்திப்புகள், கோயில்கள் என பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் கண்டிப்பாக சிசிடிவி அமைக்க போலீசார் மெ னக்கிட்டு, சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்தி, செயல்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர். இதனால், குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடியாவிட்டாலும், குற்றவாளிகளை எளிதிலும், விரைந்தும், சரியாகவும் சுற்றிவளைத்து தூக்குகின்றனர். மேலும், நீதித்துறை நடவடிக்கைகளையும் பிசறாமல் முடிக்க ‘சிசிடிவி’ பதிவுகளே போலீசாருக்கு உற்ற நண்பனாக உள்ளன. இதன்மூலம், போலிசார் பொதுமக்களின் ‘பிறழ் சாட்சியங்கள்’ எனம் தர்மசங்கடங்களை சந்திக்காமல், நெஞ்சை நிமிர்த்தி நீதிமன்றங்களில் குற்றவாளிகளை நீதிபதிகள் முன்னாள் நேர்நிறுத்துகின்றனர்.
இப்படி, முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது கண் எனப்படும் ‘சிசிடிவி’ கேமராக்கள் தஞ்சாவூர் மாநராட்சி, மகாத்மா காந்திஜீ சாலையில் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சாலை மாநகராட்சியல் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையில் தினமும் அரசு பஸ், தனியார் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்ல்கின்றன. இந்த சாலையில்தான் மாநகராட்சி அலுவலகம், எல்.ஐ.சி. அலுவலகம், நவீன விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவை உள்ளன.
இந்தயோரத்தில் இரும்பு பைப் நடப்பட்டு, அதற்கு மேலே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. தற்போது, அந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால், அந்த பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள், மாநகராட்சி மேயர், எம்எல்ஏ., ஆகியோர் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கவும், மாகரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகள், முக்கிய சாலைகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஏஐடியூசி கோரிக்கை தஞ்சா மாநகர் பெருமாள் கோயில்களில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலம் appeared first on Dinakaran.