- கிரிஸ்துவர்
- வேளாங்கண்ணி
- மாதா கோயில்
- தஞ்சாவூர்
- கிரிஸ்துவர்
- வேளாங்கண்ணி மாதா கோவில்
- நாகை மாவட்டம்
- புனித ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா
- வேலங்கண்ணி மாதா கோயில்
தஞ்சாவூர், ஆக. 27: வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கிறித்துவர்கள் யாத்திரையாக செல்கின்றனர். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்தமாதம் (செப்டம்பர்) 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும், சிறிய வாகனம் மற்றும் தேரில் மாதா, இயேசு சொரூபங்களை வைத்து இழுத்த படியும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குழுவாக யாத்திரிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், குழந்தை இயேசுவையும், மாதா சொரூபங்களையும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக வருகின்றனர். அதில், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி மாதா பாதயாத்திரை குழுவினர் சிறிய வாகனத்தில் மாதா, இயேசு சொரூபங்களை வைத்து அதனை இழுத்துக் கொண்டு, தஞ்சாவூர் வழியாக செல்கின்றனர். அப்போது மாதா, இயேசு பாடல்களை ஒலித்தப்படி சென்றனர்.
இதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தஞ்சை வழியாக செல்கின்றனர்.
The post சிசிடிவி கேமராக்கள் சீரமைக்க நடவடிக்கை தேவை வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு கிறித்துவர்கள் யாத்திரை appeared first on Dinakaran.