×
Saravana Stores

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை

ஜெயங்கொண்டம், ஆக.27: ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்ட்டமியையொட்டி சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள் குங்குமம் வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மா, பலா, வாழை, திராட்சை, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான மக்கள் கால பைரவரை வணங்கி தரிசித்துச் சென்றனர்.

அரியலூர், ஆக.27: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கராயபுரம், நல்லனம், உட்கோட்டை, கல்லாத்தூர், ரெட்டிதத்தூர், அய்யூர் மற்றும் அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் 7 புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.

தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், குடிநீர் வசதிகள், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கராயபுரம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43.62 லட்சம் மதிப்பீட்டில் கோட்டியால்-காடுவெட்டாங்குறிச்சி சாலை முதல் சிங்கராயபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணி, நல்லனம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.78.78 லட்சம் மதிப்பீட்டில் நல்லனம் முதல் நாயகனைப்பிரியாள் வரை தார் சாலை அமைக்கும் பணி, பின்னர், உட்கோட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.121.18 லட்சம் மதிப்பீட்டில் உட்கோட்டை முதல் மேட்டுப்பாளையம் வரை தார் சாலை அமைக்கும் பணி ஆகியவைகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கல்லாத்தூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.126.67 லட்சம் மதிப்பீட்டில் கல்லாத்தூர் முதல் கல்லேரி, இருதயபுரம், சலுப்பை வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர் ரெட்டிதத்தூர் கிராமத்தில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.229.87 லட்சத்தில் ரெட்டிதத்தூர் முதல் சூரப்பள்ளம், விளந்தை, தென்னூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து அழகாபுரம் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.224.15 லட்சம் மதிப்பீட்டில் அழகாபுரம் முதல் விழுதுடையான் இராஜேந்திரபட்டினம் வரை தார் சாலை அமைக்கும் பணி, பின்னர், அய்யூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.47.70 லட்சம் மதிப்பீட்டில் அய்யூர் ஊராட்சி வீரனார் கோயில் முதல் காசாம்பள்ளம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் 07 புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு, விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உடையார்பாளையம் ஆர்டிஓ ஷீஜா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) மாது, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சிவசங்கர்துவக்கி வைத்தார்
ரெட்டிதத்தூர் கிராமத்தில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.229.87 லட்சத்தில் ரெட்டிதத்தூர் முதல் சூரப்பள்ளம், விளந்தை, தென்னூர் வரை தார் சாலை பணி.

The post தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Kalabhairava ,Teyparai Ashtami ,Jayangondam ,Jayangondam Kagammalainathar temple ,Teipira Ashtami ,
× RELATED அரியலூர் மாவட்ட வக்கீல்கள் பணிகள் புறக்கணிப்பு