- சேது பாஸ்கரா கல்லூரி
- காரைக்குடி
- சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- விசாலயங்கோட்டை கலம்கவி
- முதல்வர்
- கருணாநிதி
- கல்லூரி அதிபர்
- டாக்டர்
- சேதுக்குமணன்
- அழகப்பா…
- தின மலர்
காரைக்குடி, ஆக.27: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார். கல்லூரி தாளாளர் முனைவர் சேதுகுமணன் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி, முன்னாள் துணைவேந்தர் சுப்பையா சிறப்புரையாற்றினர்.
முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பட்டங்களை வழங்கி பேசுகையில், பட்டமளிப்பு என்பது கல்வியின் நிறைவல்ல. கல்வியின் துவக்கம் தான் இது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களிடம் இருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும். விவசாயப் புரட்சியிக்கு பின்னரே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன என்றார். அருட்தந்தை முனைவர் ஜான்வசந்தகுமார், ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, டாக்டர் ஏ.ராஜேந்திரன், சேது வல்லியம்மை அறக்கட்டளை செயலாளர் கோகிலம் சேதுகுமணன்,
சென்னை சோகா இகிதா மகளிர் கல்லூரி துணை முதல்வர் கண்மணி சுப்பிரமணியன், கல்லூரி இயக்குநர் ஸ்டெல்லா, திருநாவுக்கரசு, ஆதீனம், ஆத்மநாதன், பாண்டி, பாரதி, சேதுஐராணி முதல்வர் ரோஸாரியோ பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியில் 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.
The post சேதுபாஸ்கரா கல்லூரியில் பட்டமளிப்பு appeared first on Dinakaran.