×
Saravana Stores

மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் ஆர்.எம்.கே. பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்

திருவள்ளூர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நீச்சல் வளர்ச்சி சங்கத்தினர் இணைந்து மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் ஆர்.எம்.கே பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை வென்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நீச்சல் வளர்ச்சி சங்கத்தினர் இணைந்து மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தியது. சங்கத்தின் செயலாளர் எஸ்.சதீஷ்குமார், துணைத்தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர் எஸ்.எஸ்.துரை நீச்சல் போட்டியை தொடங்கி வைத்தார். ப்ரீ ஸ்டைல், பேக் ட்ரோக், பட்டர் பிளை, பிரெஸ்ட் ஸ்டிரோக் ஆகிய 4 வகைகளில் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் 7-9, 11-13, 15-17, 18-19 ஆகிய வயது பிரிவுகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவிகள் 150, மாணவர்கள் 300 பேர் என மொத்தம் 450 பேர் ஆர்வத்துடன் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிறப்பிடம் பெற்று முதல் 3 இடங்களில் 114 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆர்.எம்.கே பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை வென்றனர். டிஎஸ்டிஏ பொதுச் செயலாளர் கே.சதீஷ்குமார், தலைவர் துரை, துணைத் தலைவர் முத்துக்குமார், பொருளாளர் சரவணன், கமிட்டி உறுப்பினர்கள் கோபி, உதயச்சந்தர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

The post மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் ஆர்.எம்.கே. பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் appeared first on Dinakaran.

Tags : R. M. K. ,Thiruvallur ,Sports Development Authority ,District Swimming Development Association ,RMK School ,District Sports Development Authority ,Tiruvallur District Sports Development ,R.M.K. Overall Championship for School ,Dinakaran ,
× RELATED மதுரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை: அமைச்சர் தகவல்