×

இரும்பு கிரேன் விழுந்து கூலி தொழிலாளி பலி

திருவள்ளூர்: இரும்பு பொருட்களை சேகரித்து எடுத்து செல்வதற்காக வந்தபோது, இரும்பு கிரேன் மீது மினி வாகனம் மோதி கூலி தொழிலாளி தலை மீது விழுந்ததில் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் சமூக ஆர்வலர், வில்லேஜ் செல்ப் கவர்னன்ஸ் கிராம வளர்ச்சிக்காண ஆராய்ச்சி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் விவசாய பயன்பாடுக்கான கருவிகள் மற்றும் கிராமத்தில் புதிதாக செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இங்குள்ள பழைய பொருட்களை இரும்பு கடைக்கு போடுவதற்காக இரும்பு கடைக்காரர்களை நேற்று மாலை வரவழைத்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவர் இரும்பு பொருட்களை சேகரிப்பதற்காக வந்தார். இவருடன் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி(47) என்பவரை துணைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, வாகனத்தில் இரும்பு பொருட்கள் ஏற்றுவதற்காக உள்ளே செல்கின்றபோது மினி வாகனம் கிரேன் மீது மோதியதில் அது கீழே சரிந்து எதிர்பாராத விதமாக கூலி தொழிலாளி முரளியின் தலை மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே துதிதுதித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இரும்பு கிரேன் விழுந்து கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ilango ,Kuthambakkam ,
× RELATED இரும்பு கிரேன் விழுந்து கூலி தொழிலாளி பலி