×

குரங்கம்மை பரவுவதை தடுக்க 6 மாத திட்டம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஜெனீவா: குரங்கம்மை பரவுவதை தடுப்பதற்கு உதவும் வகையில் 6 மாத திட்டத்தை ஐநா சுகாதார அமைப்பு தொடங்கி உள்ளது.  ஆப்பிரிக்க நாடுகளில் சமீப நாட்களாக குரங்கம்மை நோய் பரவி வருகின்றது. இந் நோயை உலக சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் கண்காணிப்பை அதிகரிப்பது, தடுப்பதற்கான உத்திகளை அதிகரிப்பது என குரங்கு அம்மை பரவுவதை தடுக்க உதவும் 6 மாத திட்டத்தை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 6 மாதத்திற்கு இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.1132கோடி தேவைப்படும். குரங்கம்மை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசிகள் கிடைப்பதை மேம்படுத்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலமாக காங்கோ மற்றும் அண்டை நாடுகளில் குரங்கம்மை பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post குரங்கம்மை பரவுவதை தடுக்க 6 மாத திட்டம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : World Health Organization ,Geneva ,UN Health Organization ,African ,World Health ,
× RELATED புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ரஷ்யா