நாகர்கோவிலில்: நாகர்கோவிலில் பெண் மருத்துவருக்கு முதுநிலை படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். எம்.பி.பி.எஸ். முடித்துள்ள சுதிமா என்பவரிடம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக கூறி ஜான்சி மோசடி செய்துள்ளார்.
சுதிமாவின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறி அவரது தந்தை ஆனந்த கென்னடியிடம் ஜான்சி கூறியுள்ளார். பேராசிரியை ஜான்சி கூறியதை நம்பி மருத்துவர் ஜானகி ராமனிடம், அவரது தந்தை ரூ.23 லட்சம் தந்துள்ளார்.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியதாகக் கூறி உத்தரவு நகலை ஆனந்த கென்னடியிடம் வழங்கி உள்ளனர். உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு கொண்டு சென்று தந்தபோது அது போலி என தெரிய வந்தது. உத்தரவு நகல் போலி என தெரிய வந்ததை அடுத்து ஜான்சியிடம் தான் தந்த ரூ.23 லட்சத்தை ஆனந்த கென்னடி கேட்டுள்ளார்.
பணத்தை தராமல் ஏமாற்றியதை அடுத்து ஜான்சி உள்ளிட்டோர் மீது ஆனந்த கென்னடி போலீசில் புகார் அளித்தார். புகாரை அடுத்து பேராசிரியை ஜான்சியை கைது செய்த நிலையில் மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post நாகர்கோவிலில் பெண் மருத்துவருக்கு முதுநிலை படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட பேராசிரியை கைது appeared first on Dinakaran.