×
Saravana Stores

நயினார்கோவிலில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

 

பரமக்குடி,ஆக.26: நயினார்கோவில் நாகநாதர் சௌந்தரநாயகி அம்மன் ஆலயத்தின் வாசுகி தீர்த்தத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் அமைந்துள்ள நாகநாதர் சௌந்தரநாயகி ஆலயத்தில் எதிரே உள்ள வாசுகி தீர்த்தத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றிலும் தடுப்பு வேலை அமைத்து, பேவர் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் திருப்பணி குழு தலைவர் மேமங்கலம் துரைப்பாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். பிராதான் தொண்டு நிறுவனமும், நயினார்கோவில் வாசுகி தீர்த்த திருப்பணி குழு இணைந்து பொதுமக்களிடம் நன்கொடை பெற்று இந்த வாசுக்கு தீர்த்தத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி வாசுகி தீர்த்தத்திற்கு தண்ணீர் வரும் பாதையே சரி செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில் மும்முடிச்சாத்தான் ஊராட்சி தலைவர் விஜயன், நயினார்கோவில் ரத்ன சபாபதி,சோமசுந்தரம், மலைச்சாமி,நாகலிங்கம், நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஆட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், தாழையடிகோட்டை ராஜேந்திரன், ராதாபுளி சாத்தையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நயினார்கோவிலில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்ற வேண்டும்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Theppakulam ,Nainar temple ,Paramakudi ,Vasuki Theertha ,Naganathar ,Soundaranayake ,Amman Temple ,Nainarkovi ,Vasuki Theerth ,Naganathar Soundaranayake temple ,Paramakudi taluk ,Nayanarkovil ,Dinakaran ,
× RELATED களக்காட்டில் செடி-கொடிகள் படர்ந்து...