கண்ணன் பிறந்த நாளையொட்டி, குழந்தை கண்ணன் பற்றிய சில தகவல்கள்…
*நாகர்கோவில் அருகேயுள்ள, பாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோவிலில் கண்ணன் குழந்தையாக துயில் கொண்டிருப்பதால், அவரது தூக்கம் கலையாமல் இருக்க, நாதஸ்வரம், தவில் வாத்தியங்கள் வாசிக்கப்படுவதில்லை. புல்லாங்குழலின் இனிய மெல்லிய இசை பூஜைகளின் போது ஒலிக்கிறது.
*குருவாயூர் உன்னிகிருஷ்ணன், குழந்தையாக நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார்.
*கர்நாடக மாநிலம் உடுப்பியில் கிருஷ்ணன் குழந்தை வடிவில் ஒரு கையில் தயிர் கடையும் மத்தும் மறு கையில் வெண்ணையுமாக காட்சி அளிக்கிறார்.
*கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி அருகேஉள்ளது கிருஷ்ணன் கோயில் தலம். இங்கு கிருஷ்ணன் கோயில் இருப்பதாலேயே ஊருக்கும் அதே பெயர் வந்தது. மூலவர் பாலகிருஷ்ணன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். தனது இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியுள்ளார். குழந்தைப் பேறு அருளும் கிருஷ்ணன் இவர். இங்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு தொட்டிலில் பட்டுத் துணி விரித்து குழந்தை கிருஷ்ணனைப் படுக்க வைத்து நாதஸ்வரத்தில் தாலாட்டு இசைப்பார்கள்.
*கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள சிதா மந்திர் கோயிலில் கண்ணன் உடுப்பியில் உள்ளது போலவே கையில் மத்துடன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்திஅன்று புஷ்ப அலங்காரம், வெண்ணை அலங்காரம் என்று பல்வேறு அலங்காரங்கள் செய்கிறார்கள். கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைத்து தாலாட்டு பாடுகிறார்கள்.
*கர்நாடக மாநிலம் தொட்ட மகளூரில் கோயில் கொண்டுள்ள கிருஷ்ணனுக்கு நவநீத கிருஷ்ணன் என்று பெயர். தவழும் குழந்தையாக கண்ணன் காட்சி அளிக்கிறார்.
*கும்பகோணம் சாரங்கபாணி ேகாயில் கருவறையில் ஆதிசேஷன் மீது பற்று கொண்டுள்ள குழந்தை வடிவ கிருஷ்ண விக்ரகம் உள்ளது.
*கோகுலம் ஆயர்பாடியில் உள்ள கண்ணன் கோயிலில் சிறிய மரத் தொட்டிலில் மரத்தால் வடிக்கப்பட்ட சின்னக் கண்ணன் அழகாகக் காட்சி தருகிறான்.
*பீகார் மாநிலம் கயா ஸ்ரீகதாதரர் கோயிலின் முன்னுள்ள பெரிய ஆலமரத்தில் கிருஷ்ணன் ஆல இலையில் படுத்துக் கொண்டு, வலது கால் கட்டை விரலை வாயில் வைத்து சூப்பிக் கொண்டு குழந்தையாக காணப்படுகிறார்.
– எஸ்.ராஜம், திருச்சி.
The post ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி appeared first on Dinakaran.