×
Saravana Stores

மல்யுத்த போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்திய நேஹா சங்வான்: வெற்றியை வினேஷ் போகத்திற்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!!

அம்மான்: ஜோர்டானில் நடைபெற்ற மகளிர் மல்யுத்த தொடரின் இறுதி போட்டியில் வென்று சாம்பியனான நேஹா சங்வான் வெற்றியை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அர்பணிப்பதாக கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று விட்டு கடந்த வாரம் சொந்த ஊரான ஹரியானாவுக்கு வருகை தந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இளம் மல்யுத்த வீராங்கனை நேஹா சங்வான் என்பவர் வினேஷ் போகத்துக்கு கரன்சி மாலை அணிவித்து வரவேற்பு அளித்து வியப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் ஜோர்டான் தலைநகர் அம்மானில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 57 கிலோ எடை பிரிவு மகளிர் மல்யுத்த இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பானின் நேஹா சங்வான் எதிர்கொண்டார். அதிரடியாக விளையாடிய நேஹா சங்வான் 10 க்கு 0 என்ற கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சம்பியன் ஆனார். இந்த வெற்றியை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு சமர்ப்பிப்பதாக நேஹா சங்வான் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீராங்கனையின் சொந்த கிராமத்தில் இருந்து சென்ற நேஹா சங்வான்இறுதி போட்டியில் வென்று சாம்பியனாக இருப்பது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

The post மல்யுத்த போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்திய நேஹா சங்வான்: வெற்றியை வினேஷ் போகத்திற்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Neha Sangwan ,Vinesh Bhogam ,Amman ,series ,Jordan ,Vinesh Phogat ,Paris Olympics ,Haryana ,Dinakaran ,
× RELATED கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி...